2026 ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் இம் மாதம் 17 ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வானது அன்றைய தினம் பிற்பகல் 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.
சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாக, சூரியன் ஒரு ஒளிவட்டம் (Ring of Fire) போன்று காட்சியளிக்கும்.
இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால், சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.
இந்த சூரிய கிரகணம் தென் ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு அர்ஜென்டினா போன்ற பகுதிகளில் தெளிவாகத் தெரியும்.
தென் பெருங்கடலில் பயணம் செய்பவர்களுக்கும், ஆய்வு நிலையங்களில் இருப்பவர்களுக்கும் முழுமையான வளையம் தெரியும் நிலையில், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இருப்பவர்களுக்குச் சூரியன் ஒரு பகுதியை இழந்த ‘கடித்த ஒரேன்ச் பழம்’ போலப் பகுதியாகக் காட்சியளிக்கும்.
நிலவை விட 400 மடங்கு பெரிய சூரியன், அதே 400 மடங்கு அதிக தொலைவில் இருப்பதால் ஏற்படும் இந்தத் துல்லியமான நிழல் நிகழ்வு, சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










