2026 உலக பரா தடகளத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், ஏனைய நாட்டு வீராங்கனைகளை முந்திக்கொண்டு முதலிடத்தைப் பெற்று இந்தத் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

இதன் மூலம் சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கான கௌரவத்தை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆண்களுக்கான நீளம் பாய்தல் (T46/47 பிரிவு) போட்டியில் பங்கேற்ற அவர், மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்த வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

இலங்கை வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தற்போது புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects