அமெரிக்காவிற்குள் நுழைய எதிர்பார்க்கும் அனைத்து விசா விண்ணப்பதாரர்களின் பின்னணி சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்குள் நுழைய எதிர்பார்க்கும் அனைத்து விசா விண்ணப்பதாரர்களின் பின்னணி சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, குடியேற்ற மற்றும் குடியேற்றமற்ற விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் தாம் பயன்படுத்தும் சமூக வலைத்தள அடையாளங்களை (Social Media Identifiers) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அல்லது பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய, நாட்டிற்குள் நுழைய தகுதியற்ற நபர்களை அடையாளம் காண்பதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசா பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளில் இத் தரவுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

விசா விண்ணப்பதாரர்கள் தாம் பயன்படுத்தும் சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விபரங்களை வழங்குவதை 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா கட்டாயமாக்கியுள்ளது.

இதன்படி, விண்ணப்பதாரர்கள் தமது விசா விண்ணப்பங்களில் சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பான சரியான தகவல்களை உள்ளடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects