அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 30.11.2023 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார்,பயிற்சி நெறியின் வளவாளர்களாக செல்வி.எம்.கே.திலினி மதுசிகா, திருமதி. சுதேசி தில்ருக்சி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக்கற்கை நெறியை அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects