உலக சிலம்ப சம்மேளனங்களின் ஒன்றியம் நடாத்திய “2வது சிலம்ப உலகக் கிண்ணம் மற்றும் பாரம்பரிய கலை விழா 2026”!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சிலம்ப சம்மேளனங்களின் ஒன்றியம் (World Union of Silambam Federation) நடத்திய “2வது சிலம்ப உலகக் கிண்ணம் மற்றும் பாரம்பரிய கலை விழா 2026” (2nd Silambam World Cup & Traditional Arts Festival) அண்மையில் இந்தியாவின் ஓசூர் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பெப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்தப் பாரிய சர்வதேசப் போட்டியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர்கள் கலந்துகொண்டு தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் வரலாற்றுச் சாதனை:

இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் (Sri Lanka Silambam Federation) சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள், சர்வதேச அரங்கில் வியக்கத்தக்க சாதனையைப் பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்தப் போட்டிகளின் முடிவில் இலங்கை அணி பின்வரும் பதக்கங்களைச் சுவீகரித்தது.

தங்கப் பதக்கங்கள்: 29

வெள்ளிப் பதக்கங்கள்: 16

வெண்கலப் பதக்கங்கள்: 24

மொத்தப் பதக்கங்கள்: 69

இந்த அபார வெற்றியின் மூலம், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இப்போட்டியில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியை ஆசான் ரா. திவாகரன் தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியிருந்தார். அவரது நுணுக்கமான பயிற்சிகளும், வீரர்களின் அயராத உழைப்பும், ஒற்றுமையுமே சர்வதேச மட்டத்தில் இந்த வெற்றியை ஈட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

சர்வதேச அரங்கில் இலங்கையின் பாரம்பரிய சிலம்பக் கலையின் வலிமையை மீண்டும் ஒருமுறை இந்தப் பதக்க வேட்டை நிரூபித்துள்ளது.

இந்த வெற்றி, இலங்கையில் சிலம்பக் கலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும், இளம் வீரர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளிப்பதற்கும் ஒரு மைல்கல்லாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிபெற்ற அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் மற்றும் இந்த முயற்சிக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects