தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய வெளியீடுகள் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட படைப்புகளை பெற்றுக்கொள்ளல் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், மேற்படி வருடங்களில் வெளியிடப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகள், கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிப் படைப்புகள் போன்றவற்றை இந்த வருடம் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விண்ணப்பங்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் வெளியீடுகள் மற்றும் நூல் அபிவிருத்தி பிரிவிலிருந்தும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் வெளியிடப்பட்ட புத்தகங்களை சந்தைப்படுத்துவதில் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குதல், தரமான புத்தகங்களை கொள்வனவு செய்தல், நூலகங்களை மேம்படுத்துதல் மற்றும் வாசிப்பை ஊக்குவித்தல் என்பனவாகும்.

எழுத்தாளர்கள் இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள,

கொழும்பு 07, நிதஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபைக்கு வருகை தந்தோ அல்லது 0112-687583 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், www.natlib.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் இத் திட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects