நாட்டில், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக பாடசாலை சூழலை தூய்மைப்படுத்துவதற்கு, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரியுள்ளார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மதஸ்தலங்கள், வைத்தியசாலைகள் மற்றும் காரைதீவு பகுதியின் அரச கட்டடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புத்தாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களிடத்தில், வயிற்றுப்போக்கு மற்றும் இன்ஃப்ளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇