கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21.01.2025) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









