ஆண்டின் ஆரம்பத்திலேயே வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை சுற்றுலாத்துறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இலங்கை சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜனவரி மாதத்தின் முதல் 08 நாட்களில் மட்டும் 67,762 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மொத்த வருகையில் 17.0 சதவீதமானோர் இந்தியர்களாவர். இதன்படி, முதல் 08 நாட்களில் 11,367 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் இலங்கைக்கு 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். மேலும், 2025 ஆம் ஆண்டு முழுவதிலும் வரலாறு காணாத வகையில் 2,362,521 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான இலக்காக 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், வருடத்தின் ஆரம்பமே இவ்வாறான நேர்மறையான வளர்ச்சியை காட்டியிருப்பது சுற்றுலாத்துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects