அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று (21.01.2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி , அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 8 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந் நிலையில் , தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் கணக்கெடுப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் , 18 இலட்சம் பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இருப்பினும், தற்போது 17,20,000 பயனாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










