‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டில் மகாவலி இளைஞர் படையணியை இணைத்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போதைப்பொருள் தடுப்பு – மகாவலி இளைஞர் படையணி 2026 ஐ நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் 25.02.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுக் குழுவின் செயலாளரும், ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, மகாவலி இளைஞர் படையணியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி பெற்ற 600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நடைபெறும் தேசிய செயல்பாட்டுக் குழுவில் இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத் ஆகியோருடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects