டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து பயண கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும், பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
பேருந்து பயண கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதானால் 4 சதவீத எரிபொருள் விலை திருத்தம் கவனத்திற்கொள்ளப்படும்.
இருப்பினும், தற்போதைய விலை குறைப்பானது 1.5 சதவீதமாகவே அமைந்துள்ளதால், பேருந்து பயண கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇