மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புரூரிட்டஸ் எனும் காதில் ஏற்படும் பாதிப்பிற்கான சிகிச்சை………

இன்றைய சூழலில் பாடசாலையில் பயிலும் பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை காதில் ஒலி பெருக்கி குழாயை பொருத்திக்கொண்டு பாடல்களை கேட்பதோ.. உரையாடல்களை கேட்பதோ காணொளிகளை காண்பதோ இயல்பாகிவிட்டது. ஆனால் இதன் காரணமாகவும் சிலருக்கு புரூரிட்டஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் மீண்டும் மீண்டும் காதில் ஏற்படும் அரிப்பு பாதிப்பு உண்டாகக் கூடும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் பாரிய அசௌகரியத்தை தொடர்ந்து வழங்கக் கூடும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்மில் பலரும் காது பகுதியை எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய அளவிலான பொருளைக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருப்பதை அவதானித்திருப்போம். அவர்கள் காதில் ஏற்பட்ட விவரிக்க இயலாத அரிப்பின் காரணமாக அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக அத்தகைய செயலை செய்வார்கள். அத் தருணத்தில் நிவாரணம் கிடைக்குமே தவிர மீண்டும் சிறிது நேரம் கழித்து அத்தகைய பாதிப்பு உண்டாகும். இது போன்ற தருணங்களில் அத்தகைய காது அரிப்பு பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.

வறட்சியான தோல், தோல் அழற்சி, பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று, நரம்பு சேதம், நீரிழிவு,ஸ்ட்ரஸ் எனப்படும் மன உளைச்சல் என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு காதில் ஏற்படக்கூடும். சிலருக்கு காதில் இயல்பாக சேரும் வேக்ஸ் எனப்படும் மெழுகின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். வேறு சிலருக்கு உடலில் சில பகுதியில் ஏற்படும் சொரியாசிஸ் பாதிப்பின் காரணமாகவும் தலையில் ஏற்படும் பொடுகு காரணமாகவும் காதில் அரிப்பு பாதிப்பு ஏற்படும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் வைத்தியர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையையும் அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மீண்டும் மீண்டும் புரூரிட்டஸ் எனும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையையும் உறுதியாக பின்பற்றத் தொடங்கினால் இத்தகைய பாதிப்பு தொடர்ந்து ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் விக்னேஷ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects