கொழும்பு நகரின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தில் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கொழும்பின் மையப்பகுதியில் வளித் தரச் சுட்டெண் 04.03.2025 அன்று 144 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் பாதுகாப்பான அளவு 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

100 க்கும் அதிகமான பதிவுகள் ஆரோக்கியமற்ற சூழலைக் குறிக்கின்றன.

இது தொடர்பாக சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் மஹேஷாக விஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பது சிறுவர்களின் நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இது ஆஸ்துமா, சுவாச நோய்கள் மற்றும் சிறுவர் மரண வீதத்தை அதிகரிக்க வழிவகுக்கும்” என எச்சரித்தார்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 600,000 குழந்தைகள் காற்று மாசுபாடு தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

காற்றில் உள்ள மிகச்சிறிய துகள்கள் (PM2.5) சுவாசப் பை மற்றும் இரத்த நாளங்களுக்குள் ஊடுருவிப் பாரிய நோய்களை உண்டாக்கும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் படி, உலக மக்கள் தொகையில் 99 சதவீதமானோர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்கின்றனர்.

இது ஆண்டுதோறும் சுமார் ஏழு மில்லியன் முன்கூட்டிய மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects