இலங்கையில் மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு மார்ச் 10 ஆம் திகதி முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்துமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
அதற்கமைய இம்முறை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் 2026 மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை இடம்பெறவுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டவர்களிடம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
இதன் முக்கிய நோக்கம் எதிர்கால தேசிய வாய்வழி சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும், தடுப்புத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் தேவையான முக்கிய தரவுகளைப் பெறுவதுமாகும்.
பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு இணைந்து விசேட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்துள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










