மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் தலைமையில் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருனாளினியின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (09.03.2026) நடைபெற்றது.

“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தில் பெருமை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் மகளிர் தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்ளை வலுவூட்டும் வகையில் வியாபார பதிவு, வியாபார நுட்பங்கள், வியாபார குறியீடுகளை அறிமுகம் செய்தல் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அசட் லைன் (Asst Line) நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை அசட் லைன் நிறுவன பிராந்திய முகாமையாளர் எம்.எஸ்.எம்.நாசரினால் வங்கி முறைமைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சிறு தொழில் முயற்சியாண்மை பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.வினோத், அசட் லைன் பிரதி நிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட பெண்கள் அதிகார சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects