இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார் .
கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் திறந்து வைத்ததோடு கண்காட்சிக் கூடத்தையும் பார்வையிட்டார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பெண் தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டும் ஒழுங்கு செய்யப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…