நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12.03.2026) முற்பகல் 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகள், கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் எத்தியாவல, ஜன்குரவெல, களுவரிப்புவ, மிரிஸ்வத்த, கோன்கொடமுல்ல, ஹல்பே, எண்டிமுல்ல, அம்பலாயாய, தோப்புவ, வைக்கால் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சபை, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










