லிட்ரோ எரிவாயு விலைகள் 10.03.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 3990 ரூபாவாகும்.
அதேபோல், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 1602 ரூபாவாகும்.
மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










