மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நிலைக்கு மத்தியில், சமூக வலைத்தளங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக, அறியப்படாத நபரிடமிருந்து வரும் சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள புலம்பெயர் இலங்கைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சைபர் தாக்குதல்கள் (Cyber-attacks) குறித்து இஸ்ரேலில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், லிங்குகள் (Links) அல்லது செய்திகளை க்ளிக் செய்து, பார்வையிடவேண்டாம் என நிமல் பண்டார இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை மேலும் அறிவுறுத்தியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










