மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடாத்தும் “பால் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயல்வாத வார” நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் 01. 12.2023 அன்று மண்முனை வடக்கில் இடம்பெற்றது.
நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி அவர்கள் கலந்துகொண்டதுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பின் பணிப்பாளர் தர்ம ரஞ்சன் சங்கீதா, பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், திருமதி.லட்சண்யா பிரசந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்கள அதிகாரிகள், மகளீர் சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வானது மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து கவனயீர்ப்பு பேரணியொன்றை பிரதான வீதி வழியாக முன்னெடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மண்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலைய மாணவிகளின் வரவேற்பு நடனம், விழிப்புணர்வு பாடல்கள், விழிப்புணர்வு வீதி நாடகம், பெண்களுக்கான அவசர கால நிதி திரட்டலுக்கான ஆரம்ப நிகழ்வு மற்றும் அதிதிகள் உரை என்பனவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇