திட்வா புயல் காரணமாக சேதமடைந்த இரணவில – தொடுவா பாலம் புனரமைப்பிற்கு பின்னர் மீள திறக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் திறக்கப்பட்டதன் ஊடாக மாரவில – சிலாபத்திற்கிடையிலான போக்குவரத்து முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கென 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு பாகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்தி இந்திய அரசின் உதவியுடன் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், இந்திய இராணுவத்தின் பொறியியல் படையணி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்திருந்தது. பாலத்தை மீள திறக்கும் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா , பாராளுமன்ற உறுப்பனிர் அஜித் கிஹான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










