2026 ஆசிய கடற்கரை விளையாட்டுபோட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கையை சேர்ந்த வீர, வீராங்கனைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

06 வது ஆசிய கடற்கரை விளையாட்டுகள் – 2026 – சான்யா போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை தடகள மற்றும் கபடி அணியினர், 27.04.2026 அன்று நாடு திரும்புகின்றனர்.

தடகளத்தில் பதக்கங்கள் குவித்த இலங்கை இந்தப் போட்டிகளில் இலங்கை தடகள வீரர்கள் சிறப்பான சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.

பதக்கங்கள் பெற்றவர்கள்:

இஷாரா சமான்மலி – பெண்கள் நீளம் பாய்தல் (Long Jump) – வெள்ளிப் பதக்கம்

சஷிகலா லங்காதிலக – பெண்கள் நீளம் பாய்தல் – வெண்கலப் பதக்கம்

ஜயத்ர சம்பத் மிராண்டா – ஆண்கள் நீளம் பாய்தல் – வெண்கலப் பதக்கம்

ஆண்கள் 4×60 மீற்றர் அஞ்சல் ஓட்டம் அணி வெண்கலப் பதக்கம்:

ஆண்கள் அஞ்சல் ஓட்ட அணியினர்:

மனுஜ பிரபாஷ்

மலித் தாமேல்

மலித் தருஷன்

சந்துன் தியாலவத்த

பெண்கள் கபடியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

பெண்கள் கபடி பிரிவிலும் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை பெண்கள் கபடி அணியினர்:

டிலக்ஷனா விமலேந்திரன்

ஹன்சிகா குமுதுனி

கஜேந்தினி ராசா

மதுரிக்கா ஹன்சமாலி

ராசதுரை பிரியவர்ணா

ஷனிகா சுதர்ஷனி

இந்த அணியினர் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட போது, 31–47 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோதிலும், வலுவான ஆட்டத்தின் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தனர்.

(முதல் பாதி: 18–20 | இரண்டாம் பாதி: 13–27)

இந்த வெற்றிகள் இலங்கையின் விளையாட்டு திறனை சர்வதேச அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இளம் வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கமாகவும் அமைந்துள்ளது. பதக்கங்களுடன் நாடு திரும்பும் இவ்வீரர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects