மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவையின் கலாசார அதிகாரசபை பொதுக்கூட்டம் – 2026

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச கலாசாரப் பேரவையின் கலாசார அதிகாரசபை பொதுக்கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாசாரப் பேரவையின் அதிகார சபை உபதலைவரும் உதவிப் பிரதேச செயலாளருமாகிய கி. இளங்குமுதன் தலைமையில் 14.03.2026 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன், கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பேரவை மற்றும் அதிகாரசபை செயலாளர்கள், உபசெயலாளர்கள், பொருளாளர்கள், ஆலோசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கலைஞர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலாசார உத்தியோகத்தரின் வரவேற்புரை, உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கலாசாரப் பேரவை, அதிகாரசபை பற்றிய தெளிவூட்டல்களும் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான விளக்கமும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டது.

உதவிப் பிரதேச செயலாளர் இவ்வமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

பேரவை, அதிகாரசபை நிருவாக தெரிவுகளும் இதன்போது இடம்பெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects