பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (20.03.2026) சான்றுரைப்படுத்தினார்.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கைக்குள் பணக் கடன் வழங்கும் தொழிலையும், நுண்நிதித் தொழிலையும் ஒழுங்குபடுத்துவது மற்றும் மேற்பார்வை செய்வது வலுவான சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு புதியதொரு ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பணக்கடன் வழங்கும் தொழிலினதும், நுண்நிதித் தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்குமான ஏற்பாடுகள் இதன்மூலம் செய்யப்பட்டுள்ளன.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் முதலாவது வாசிப்பிற்காக 2025 நவம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் 2026ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் சட்டமாக இன்று (20.03.2026) முதல் அமுலுக்கு வருகின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










