இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 2026 மார்ச் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தனிப்பட்ட தரவு ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதிலும், 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனியுரிமை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகத்தை வரவேற்றுள்ள அதிகாரசபையின் பணிப்பாளர் சபை, அவர் மூலோபாய மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளுக்குத் தலைமை தாங்குவார் எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் சட்ட விதிகளை அமுல்படுத்துதல், வழிகாட்டல்களை உருவாக்குதல் மற்றும் அரச, தனியார் துறைகளின் தரவு கையாளுபவர்களின் திறனை மேம்படுத்துதல் போன்றவை அடங்கும்.

இந்த நியமனத்திற்கு முன்னர், திரு. அதபத்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வர்த்தகமயமாக்கல் மற்றும் பங்காளித்துவப் பணிப்பாளராகப் பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் குயின்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அத்துடன் இலங்கை CERT மற்றும் LK டொமைன் பதிவகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம், மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects