மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியமும், உயர்தர மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் 22.03.2026 அன்று நடைபெற்றது.
திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி கிளமென்ட் அன்னதாஸ் அடிகளார் தலைமையில் இந்த முகாம் ஆரம்பமானது.
மட்டக்களப்பு இரத்த வங்கி வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இம்முகாமில் இருதயபுரம் பங்கு மக்கள் மட்டுமல்லாது, பிற மதங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்து தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினர்.
குருதி கொடையளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியமும், உயர்தர மாணவர் ஒன்றியமும் தமது நன்றிகளை தெரிவித்து கொண்டனர் .













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










