பால்மா மற்றும் கோதுமை மா விலைகள் அதிகரிக்கப்படாது என இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இன்று (23.03.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், எதிர்வரும் புத்தாண்டுக்காலம் வரை பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிப்பதில்லை என முன்னணி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்பில் உள்ளதாக நிறுவனப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், எரிபொருள் ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகள் காரணமாக விநியோக நடவடிக்கைகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை உணவு விநியோகத்தில் ஈடுபடும் போக்குவரத்து வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் அளவை துல்லியமாகக் கண்டறிய விசேட தரவு சேகரிப்புத் திட்டமொன்றில் (Data Collection Program) இணையுமாறு அமைச்சர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் விநியோகச் சங்கிலியை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects