நாட்டில் தென் மாகாணத்திற்கும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










