மட்டக்களப்பு மாவட்டத்தில் AMCOR நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூகப்பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் என்ற செயற்திட்டத்தின் கீழ் இளைஞர்களின் தொழில் திறனை விருத்தி செய்தல் மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் Prime Mover Driver பயிற்சிநெறி தொடர்பான அறிமுக கலந்துரையாடலானது அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்சித்திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 05.12.2023 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.லட்சனியா பிரசாந்தன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெ. கணேசமூர்த்தி hightec lanka நிறுவனத்தின் பயிற்சி இணைப்பாளர் அன்டனி ஆகியோகர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சினை வழங்கவிருக்கும் hightec lanka நிறுவன உத்தியோகத்தர்களால் Prime Mover Driving பயிற்சி பற்றிய விபரம் இப்பயிற்சிக்கான சான்றிதழின் தன்மை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇