இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை சுழற்சி முறையில் நீர் வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (02.04.2026) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத்தை சுழற்சி முறையில் இடைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நீண்ட நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 01.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. 

இதேவேளை, பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளில் இரவு 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது. 

நீர் விநியோகம் நிறுத்தப்பட்ட பின்னர், அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நீர் விநியோகம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அதன்பின்னர் 24 மணிநேரம் நீர் வெட்டு அமுலாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects