பெலன்வத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மேற்கொள்ளப்படும் நீர் விநியோக முகாமைத்துவத்திற்கு அமைய, இன்று (06.04.2026) இரவு 8.00 மணி முதல் நாளை (07.04.2026) காலை 08.00 மணி வரை பெலன்வத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (06.04.2026) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள நீர் விநியோகத் தடை இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அதற்கமைய, ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும் என அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects