விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைய தொழில் முயற்சியாளர்களை உள்ளீர்க்கும் வகையில், 500 மில்லியன் ரூபா இலகு கடன் வழங்கப்படவுள்ளது.
இதற்கான உடன்படிக்கை விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சுக்கும் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த விவசாய மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி விக்கிரமசிங்க,
இந் வேலைத் திட்டமானது விவசாயத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
தொழில் முயற்சியாளர்கள் தமது அடுத்த கட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.இதற்குத் தேவையான நிதி ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு இந்த இலகு கடன் திட்டம் மூலம் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இக்கடன் திட்டத்தில் நூற்றுக்கு நான்கு வீத வட்டி நிர்வாக செலவுக்காக மாத்திரம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி லால்காந்த மற்றும் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ஆர்.எம்.என். ஜீவந்த, மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் எஸ். என். பி .எம். டபிள்யூ நாராயண பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் டி. எம். பி. எஸ்.குமார ஆகியோரும் மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










