பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் சி.தியாகராஜா. கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் எம்.புவிராஜ் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு விசேட வீட்டு திட்டத்தின் கீழ் சமுர்த்தி ரன்விமன வீடுகள் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவின் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வலயத்தில் முனைக்காடு கிழக்கு, முதலைக்குடா மேற்கு ஆகிய பிரிவுகளில் இவ்வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் 7.5 இலட்சம் ரூபாய்கள் பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇