ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் இணைந்துள்ள விண்வெளி வீரர்கள், மனித வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அதிகூடிய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம், 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13 (Apollo 13) விண்கலத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.
ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் 06.04.2026 அன்று சந்திரனின் மிகவும் தொலைதூரப் பகுதிக்குச் சென்றதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பூமியிலிருந்து 252,752 மைல்கள் தொலைவிற்குப் பயணித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் இந்த சாதனை 248,655 மைல்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










