கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு முதலிடம்- சுங்கம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதன் பின்னர் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பட்டியலில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் பிற பொருட்கள் முதலிடம் பிடித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பண்டிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த சில வாரங்களாக கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் அத்தகைய பொருட்கள் பெருமளவான சரக்குகளில் வந்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் சிரேஷ்ட பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

ஒக்டோபர் தொடக்கத்தில் இருந்து இலங்கையில் தனியார் மோட்டார் கார்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் பண்டிகை அலங்காரங்களும் இரண்டு வருடங்களாக தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பண்டிகைக் காலப் பொருட்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 40-அடி மற்றும் 20-அடி கொண்ட பெரிய கொள்கலன்களில் சீனாவில் இருந்து வருகின்றன, மேலும் பல வர்த்தகர்கள் இந்த ஆண்டு வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலங்காரங்களுக்கு அடுத்தபடியாக விசேட உணவுப் பொருட்கள், தரை மற்றும் சுவர் ஓடுகள் ஆகியவையும் தற்போது இறக்குமதிப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன என சுங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects