அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று 31.07.2026 பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.

உரிய பயனாளிகள் இன்று 31.07.2026 முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects