பாகிஸ்தான் கடற்படையின் ‘பிஎன்எஸ் தைமூர்’ (‘PNS TAIMUR’ ) மற்றும் ‘பிஎன்எஸ் அஸ்லத்’ (‘PNS ASLAT’ ) போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
பாகிஸ்தான் கடற்படையின் ‘பிஎன்எஸ் தைமூர்’ (‘PNS TAIMUR’ ) மற்றும் ‘பிஎன்எஸ் அஸ்லத்’ (‘PNS ASLAT’ ) ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 12.04.2026 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களை வரவேற்றது.
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ‘ ‘பிஎன்எஸ் தைமூர்’ (‘PNS TAIMUR’) கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் நியாமத் சயீத் கான் (NIAMAT SAEED KHAN) உம் ‘பிஎன்எஸ் அஸ்லத்’ (‘PNS ASLAT’ ) கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் நாதிர் மதீன் அஃப்ரிடி (NADIR MATEEN AFRIDI) உம் உள்ளனர்.
மேலும், இக் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (Bilateral Naval Exercise LION STAR V) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளன.








இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










