புறக்கோட்டை மத்திய பேருந்து தரிப்பிட வளாகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அங்குள்ள பொதுச் சொத்துக்களை பாதிப்பின்றி பயன்படுத்தல் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று 12.04.2026 அன்று நடைபெற்றது.
இலங்கை போக்குவரத்துச் சபை, பொலிஸார் மற்றும் விமானப் படையினர் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
பண்டிகை காலத்தில் பேருந்து தரிப்பிட வளாகத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களை வீணடிப்பதை தவிர்த்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுவது பொதுமக்களின் பங்கேற்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, கொழும்பு மாநகர சபையின் நேரடி ஆதரவுடன் பேருந்து நிறுத்த வளாகம் சுத்தம் செய்யும் பணியும் 12.04.2026 அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பயணிகளிடையே விழிப்புணர்வும், முன் அறிவிப்பு துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல், பொதுச் சொத்தின் முக்கியத்துவம் மற்றும் அதற்கென காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.








இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










