21.04.2019 அன்று உயிர் நீத்த உறவுகளின் ஆறாவது ஆண்டு நினைவாக “எங்கள் உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சம்மேளனம் 07 ஆவது தடவையாக இரத்த தான முகாம் ஒன்றை நடாத்தவுள்ளது.
அதன் அடிப்படையில், குறித்த இரத்த தான முகாம் 21.04.2026 அன்று முற்பகல் 08.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 வரை மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சம்மேளனம் இரத்தக் கொடையாளிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு
075 4370092 / 0754604748 / 075 3894831



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










