ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அநுர கருணாதிலக்க 20.04.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










