எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 30.09.2025 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாகும்.

ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.
 
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
 

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு அமையாக தமது எரிபொருட்களின் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects