சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இந்த நிலையில், விடுதிகள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், சுற்றுலாத்துறை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னர் எதிர்மறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் சுற்றுப்பயணங்கள் குறித்து திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், அனுராதபுரம், சிகிரியா, பொலன்னறுவை போன்ற முக்கிய கலாசார மற்றும் வரலாற்று இடங்களும், வனவிலங்குப் பூங்காக்களும் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. 

இந்தத் தரவுகளின் அடிப்படையில், இலங்கை மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராக உள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects