சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணைக்கான நிதி எதிர்வரும் 12 .12.2023 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி தொகையின் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇