தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் நிலவி வரும் கடும் மழை மற்றும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இன்று (13.05.2026) அதிகாலை முதல் வீதியில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் , அந்த வீதியூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பல வீதிகளிலும் இவ்வாறான அடர்த்தியான மூடுபனி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, மூடுபனி நிலவும் பகுதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










