அரச அதிகாரிகளுக்கான விசேட முன்பணமொன்றை வழங்க தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச அதிகாரிகளுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 2024 ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் பெப்ப்ரவரி 29ம் திகதி வரை வழங்கப்பட உள்ளது.

திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.

இந்த முன்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects