உலர் வலயத்தில் வரவிருக்கும் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நெல் விதைப்பு மற்றும் உர விநியோகம் போன்ற முக்கிய விவசாயப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், குருகுலவ பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த விசேட பயிலரங்கொன்று அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, முற்றிலும் உள்நாட்டு கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விவசாய ட்ரோன் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.
அத்துடன், வரவிருக்கும் பெரும்போக பருவத்தில் இந்த நவீன தொழில்நுட்பத்தை விவசாய நடைமுறைகளில் எவ்வாறு வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது என்பது குறித்தான கலந்துரையாடல்களும் இந்த பயிலரங்கின் போது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










