உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழில் நிபுணர்கள் அமைப்பின் 37ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத சுமார் 3 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தலாம். அத்துடன் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
விவசாயம், பால் பண்ணை மற்றும் புதிய பயிர் உற்பத்திக்காகப் பெருமளவான காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇