நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கிடையில் உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையின் விசித்திர நிகழ்வாக கருதப்படும் இந்த சம்பவத்தை பார்ப்பதற்காக அயலவர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர்.
சிலர் இதனை அரிய இயற்கை மாற்றமாகக் கருதுகின்ற நிலையில், இன்னும் சிலர் இதனை தெய்வ அதிசயமாகவும் பேசிக்கொள்கின்றனர்.
இது குறித்து வீட்டு உரிமையாளரின் மகள் பிரியதர்ஷினி கருத்து தெரிவிக்கையில்
”தான் புதிய கடையொன்றினை ஆரம்பிப்பதற்காக வாழைமரம் ஒன்று வெட்ட சென்ற போது தனது தந்தை கண்டு வந்து குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து போய் பார்த்த போது தனக்கும் அது ஆச்சரியத்தினையும், அதியசத்தினையும் ஏற்படுத்தியதாகவும் இது குறித்த சமயத்தலைவர்களிடம் கேட்ட போது வாழை வான் நோக்கி ஈன்றிருப்பது நன்மையின் அறிகுறியாக தெரித்ததாகவும் அப்படி நன்மை ஏற்பட்டால் அது இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
வாழைமரத்தின் உட்பகுதியில் சிக்கியபடி வெளிவந்துள்ள இந்த வாழைக்குலை தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










