2025ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையாக நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக BBC ISWOTY விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதன்படி இந்தியாவின் சதுரங்க வீராங்கனையான திவ்யா தேஷ்முக், தடகள வீராங்கனை பிரீத்தி பால், அஞ்சலி பகவத் ஆகியோருக்கும் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் தற்போது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, காணொளி மூலம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










